31st Day Remembrance
Late Tharsigan Thanabalasingam

Date of Birth: 16 March 2022 - Deceased: 08 August 2022
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்ஷிகன் தனபாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
ஒரு முறைதான் இப்பிறவி
போனால் வாரது என்று தெரிந்தும்
போகும் வழி எல்லாம் - பாவி
என் மனம் உங்களைத் தேடுகின்றதே!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே !
உங்கள் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
நான் பார்க்கும் திசையெல்லாம்
உங்கள் உருவே தெரியுதப்பா !!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால்
தீராது சோகமப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org