Mr. Kandiah Thambirajah

Kandiah Thambirajah

Date of Birth: 15 January 1929 - Deceased: 30 June 2022

யாழ் காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், இல 78, யாழ் இந்துக்கல்லூரி ஒழுங்கை,வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிராசா (Retired Investigation Inspector of Postal Deparment LT) 30-06-2022ம் திகதி வியாழக்கிழமை இன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லபிள்ளை தம்பதியின் மூத்த புதல்வனும், 

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதுயின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விஷாலாட்சியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, பாலசிங்கம், தியாகராசா, ராஜேஸ்வரி, மற்றும் பத்மசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமிழருவி த.சிவகுமாரன், சிவபாலன் (ஆசிரியர்), சிவகணேசன் (செய்தி ஆசிரியர் தினக்குரல்), சிவராணி (சிரேஸ்ட விரிவுரையாளர், மொழியியல்துறை, யாழ் பல்கலைக்கழகம்), சிவசோதி (ஆசிரியர்,யாழ் ஆனைப்பந்தி M M V) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

குமாரதேவி, கலாராணி, பேராசிரியர் சி. சிறீசற்குணராசா (துணைவேந்தர் யாழ் பல்கலைக்கழகம்),சுதர்ஜனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனகன்(Chartered Engineer), கௌதமன் (Senior Software Engineer), மாதங்கன்(தாதியர் பீடம் யாழ் பல்கலைக்கழகம்), பராபரன் (மருத்துவபீடம்,யாழ் பல்கலைக்கழகம்), பவித்திரன் (விஞ்ஞான பீடம், யாழ் பல்கலைக்கழகம்), சிறிசங்கர்ஷன் (யாழ் இந்துக்கல்லூரி), தாமிரா (யாழ் இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் இன்று 01-07 2022ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மனல் இந்து மயானத்திற்கு எடுதுச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

விலாசம்:-
 
இல 78,யாழ் இந்துக்கல்லூரி ஒழுங்கை,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Deepest sympathies"
- Mrs. Sivasakthy Paramanantham (SRI LANKA, 05/07/2022 11:16)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2022 05:40)